நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு உடன் கைகோர்த்து மாநாடு என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து இருந்தாலும் மற்ற வேலைகளில் மும்முரமாக செய்து வருகிறார்கள்.
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளிவந்து வெற்றிபெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் படக்குழு சமூக வலைதளப் பக்கங்களில் படம் பேசிக்கொள்ளும் தகவல்கள் ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ். ஜே. சூர்யா வில்லனாகவும் காமெடியனாக பிரேம்ஜி, கருணாகரன் நடிக்கின்றனர் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா பின்னி பெடல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாடு படக்குழு மற்ற வேலைகளை முடித்த கையோடு படத்தை டிஜிட்டல் தளத்தில் மாநாடு படத்தை வெளியிடலாம் என்று ஒரு பெரிய நிறுவனத்தை பேசி உள்ளது இவர்கள் கூறிய விலையை பார்த்து அந்த நிறுவனமே ஆட்டம் கண்டு உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
அதாவது புதிதாக தொடங்கியுள்ள சோனி லைவ் நிறுவனம் பல புதிய படங்களை கைப்பற்றி வருகிறது. இந்த நிறுவனத்திடம் மாநாடு படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி 40 கோடிக்கு கேட்டது இதை கேட்ட சோனி நிறுவனம் மறுத்துவிட்டது.
முதல் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அடுத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பார்க்கப்படுகிறது அப்படி ஓகே செய்ய முடியவில்லை என்றால் தியேட்டரில் படத்தைப் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.