நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் இப்போ உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படம் அஜித்துக்கு 61 வது படம் என்பது குறிப்பிடதக்கது. துணிவு திரைப்படத்தை ஹச். வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து உள்ளார்.
ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க முழுக்க ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன்.. மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து உள்ளனர்.
படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் செய்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க தீவிரம் காட்ட மறுப்பக்கம் திரையரங்குகளை கைப்பற்றவும் ஆர்வம் காட்டி வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் படம் குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அஜித் துணிவு திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு.. அடுத்ததாக நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர்கள், நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் தான் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதே netflix நிறுவனம் தான் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் உரிமையையும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.