ரஜினியுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க பயந்த பிரபல நடிகை..! கடைசி நேரத்தில் படக்குழுவுக்கு ஐடியா கொடுத்த சூப்பர் ஸ்டார்..

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ இவர் சினிமா ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் தனது ஸ்டைல் ஆக்சன் மூலம் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்துள்ளார். இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த படமும் வெற்றி படமாக இருப்பதால் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது கூட தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தமிழ் சினிமாவே பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கிறது.

இது இப்படி இருக்க 90 கால கட்டங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் அதில் ஒன்றாக ரஜினி பிரபு நடித்த குரு சிஷ்யன் திரைப்படம் அப்பொழுது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இருந்து தான் ஒரு சம்பவத்தை நாம் பார்க்க இருக்கிறோம்..

குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கௌதமி கமிட்டானார். அந்த நேரத்தில்  தமிழில் இரண்டு, மூன்று படங்களில் தான் நடித்து இருந்தார். இந்த படத்தில் கமிட்டான உடனேயே நடன இயக்குனராக இருந்த புலியூர் சரோஜா வந்த புதிதிலேயே ரஜினியுடன் கட்டிப்பிடிக்கும் சீனை சொல்லி இருக்கிறார் கௌதமி என்னால் எப்படி முடியும்..

என கூறி பதட்டம் ஆகிவிட்டாராம் இதை கவனித்துக் கொண்டிருந்த ரஜினி முதலில் டயலாக் சீன்களை வேண்டுமென்றால் எடுத்து விடுங்கள் அப்பொழுது அவருக்கும் கொஞ்சம் பழகுன உணர்வு வரும் அதன் பிறகு சகஜம் ஆகி விடுவார் என அறிவுரை கூறினாராம். பிறகு ஒரு வழியாக ஷூட்டிங் நடந்ததாம்..