சம்பள விவகாரத்தில் நயன்தாராவை தூக்கி சாப்பிட்ட பிரபல நடிகை.! அதுவும் 10 கோடியா வாய்ப்பிலக்கும் சக நடிகைகள்..

NAYANTHRA
NAYANTHRA

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்ட நிறுவனமாக இருந்து வரும் லைக்கா நிறுவனம் தொடர்ந்து பல கோடி பட்ஜெட்டில் ஏராளமான திரைப்படங்களை உருவாக்கி வருகிறது அந்த வகையில் கடைசியாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இந்த படத்திற்கு இணையாக மீண்டும் பிரம்மாண்டமாக சந்திரமுகி 2 திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தினை இயக்குனர் பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளஙகள் இணைந்து நடித்து வருகிறார்கள் மேலும் தற்பொழுது ஷூட்டிங்கும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா அரச குல பெண் போல் மாறி நடித்திருப்பார் எனவே அரசுக்குல பெண்ணை அந்த படத்தில் ஓவியமாக தான் காட்டியிருந்தார்கள் தற்பொழுது அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கா ரணாவத் நடிக்க இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

எனவே இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகை கங்கான ரணாவத் 10 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் அதற்கு லைக்கா நிறுவனம் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது ஆனால் கங்கனா ஷூட்டிங்கின் பொழுது செய்யும் டார்ச்சரால் இயக்குனர் பி வாசு கடுப்பாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இவ்வாறு முன்னணி நடிகைகளான நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களையும் மிஞ்சும் அளவிற்கு சம்பளம் கேட்டுள்ளார் கங்கனா.

இவ்வாறு பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.