ஒரு காலகட்டத்தில் காமெடி நடிகனாக வலம் வந்தவர் கவுண்டமணி, அந்த காலகட்டத்தில் கவுண்டமணி,செந்தில் இல்லை என்றால் படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள் அந்த அளவு மிகவும் பிரபலமடைந்தவர்கள் கவுண்டமணி, செந்தில். அதேபோல் கவுண்டமணி சோலோவாக நடித்து திரைப்படங்களும் ஹிட் அடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் இவரது காமெடியை மிஞ்ச ஆள் இல்லை என பலரும் கூறி வருகிறார்கள்.
பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் படக்குழு எங்க தங்க வைக்கிறார்களோ அங்கேதான் தங்குவார்கள் ஆனால் கவுண்டமணி மட்டும் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் 5 ஸ்டார் ஹோட்டலில் மட்டும் தான் தங்குவார். அதுமட்டுமில்லாமல் தான் உடுத்தும் உடையில் இருந்து உண்ணும் உணவு வரை ராயலாக தான் இருக்குமாம், ஏனென்றால் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை அவருக்கு உண்டு.
சுந்தர் சிக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் என்றால் கவுண்டமணி தான் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். அதே போல் இவர்களின் திரைப்படங்களும் வெற்றி அடைந்துள்ளன. இதனால் இருவரும் இணைந்து ஒன்றாக பணியாற்றிய திரைப்படம் மேட்டுக்குடி, இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் நக்மாவுடன் கவுண்டமணி இணைந்து டூயட் ஆடும் பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கும், அந்தப்பாடல் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் அந்த பாடலில் கவுண்டமணியுடன் இணைந்து கட்டிப்பிடித்து டூயட் ஆட முடியாது என நக்மா மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருடன் டூயட் ஆடினால் என்னுடைய மார்க்கெட் ககுறைந்துவிடும் என்ற எண்ணத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அப்படி டூயட் ஆடுவது போல் இருந்தால் படத்திலேயே நான் நடிக்கவில்லை என ஒரேடியாக கூறிவிட்டாராம். அதன்பிறகு அந்த திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி நக்மா விடம் கெஞ்சி படத்தில் நடிப்பதற்கு வைத்துக்கொள்ள வைத்துள்ளார், ஆனால் கவுண்டமணி பாடல் காட்சி வேண்டுமென்றே கேட்டு வாங்கி உள்ளார்களாம். பிறகு, இருவரும் அந்த பாடலில் டூயட் பாடி அந்த காட்சியும் ரெடி ஆனது அதன் பிறகு கவுண்டமணி, நக்மா இருவரும் அந்த காட்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.
இதுவரை நக்மா உடன் கவுண்டமணி நல்ல நட்பில் இருந்து வருகிறார். இதோ அந்த வீடியோ.