தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தை தில்ராஜ் இயக்க முதன்முறையாக விஜய்யின் படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலைகள் விரைவில் முடிய இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் இணைய இருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள். இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய சினிமாவில் இதுவரையிலும் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்கள் இருக்கும் முன்பு இவருடைய நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் தான் மெர்சல்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் சுவாரஸ்யம் நிறைந்த படமாக மெர்சல் திரைப்படம் அமைந்தது. இதில் நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தது மேலும் இந்த படத்தில் விஜயின் பிளாஷ் பேக் காட்சிகளில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ஜோதிகாவை தான் கேட்டு இருக்கிறார்கள்.
ஆனால் இந்த படத்தின் கதையில் சில உடன்பாடுகள் அவருக்கு இருந்து வந்தது ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்காக மறுத்துள்ளார் நடிகை ஜோதிகா. இவ்வாறு இதற்கு முன்பே நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் இவர்களுடைய காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்து போன நிலையில் இந்த படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.