தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கானா மற்றும் க பெ ரான சிங்கம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இத்தனை படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படமாகும்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார் அந்தவகையில் தற்சமயம் இவருடைய நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக அளவு தெலுங்கு திரைப்படங்களுக்கு தான் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் தமிழில் குடும்ப குத்துவிளக்கு போல் நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
ஆனால் இவர் தெலுங்கு சினிமாவில் அதற்கு மாறாக கிளாமர் காட்டி நடிப்பது மட்டும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கூட மிகவும் கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்துகொண்டு கலந்து கொள்வதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்தது எனவோ தெலுங்கு பக்கம் தான் ஆனால் அவர் வளர்ந்தது நடித்தது அறிமுகமானது என அனைத்துமே தமிழ் திரை மூலமாக தான் அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் கதை கூற வந்த நிலையில் அவருடைய கதையை கேட்டுவிட்டு மொக்க கதை என்று கூறிவிட்டாராம்.
இதை தொடர்ந்து அவர் தன்னுடைய நெருங்கிய இயக்குனர்களிடம் இது பற்றி கூறியதன் காரணமாக தற்போது ஆறு மாத காலமாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தவித்து வருகிறாராம்.