தமிழ் சினிமாவில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் சென்சேஷன் நடிகையாகவும் மாறியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஒரு பிரபலமான நமது நடிகை தற்சமயம் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது மேலும் இவர் கன்னடத்தில் திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ரக்ஷித் ரெட்டி என்பவருடன் காதல் மலர்ந்தது குறிப்பிடதக்கது.
பின்னர் இருவருடைய காதல் திருமண நிச்சயம் வரை சென்று அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டா உடன் காதலில் ஈடுபட்டுள்ளதாக சமூகவலைத்தள பக்கத்தில் செய்திகள் பரவி வருகிறது.
நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா பாரிசுக்கு சென்றுள்ளார் அதேசமயம் தன்னுடைய திரைப்பட படபிடிப்பை அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு நடிகை ரஷ்மிகாவும் பாரிசுக்கு கிளம்பி உள்ளாராம்.
இவர்கள் இருவரும் ஒரே நாளில் கிளம்பியது மட்டுமல்லாமல் இருவரும் ஒரே நாளில் மறுபடியும் திரும்ப வந்துள்ளார்கள் இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா விஜய் தேவர்கொண்டா இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.