90 கால கட்டங்களில் மக்களின் ஃபேவரைட் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் காமெடி கலந்த படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அதனால் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்தன அதிலும் குறிப்பாக கார்த்தி, கவுண்டமணி காம்போ எப்போதுமே ஒரு வெற்றி காம்போ தான் திரை உலகில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் சிறப்பாக ஜொலித்த இவர் வயது அதிகமாக தற்போது ஹீரோ வாய்ப்பு கிடைக்காமல் போனதால் தற்போது கார்த்தி வில்லன், குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கார்த்தியால் சினிமா கேரியரை தொலைத்து நிற்கிறார் ஒரு நடிகை அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
1999 ஆம் ஆண்டு சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன ராசா இந்த படம் அப்பொழுது வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து ரோஜா, பிரியா ராமன், மணிவண்ணன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படத்தின் கதையை இயக்குனர் சொல்லும் பொழுது கார்த்தி ஒரு புதுமுக நடிகை நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறிவிட்டார்.
இதனால் புதுமுக நடிகையை தேட ஆரம்பித்தது படக்குழு இந்த சமயத்தில் தான் மும்பையில் அமிதாப்பச்சன் ஒப்பந்தத்தில் பெயரில் ஒரு நடிகையை வர வழித்தனர். திடீரென கார்த்தி சிறிது காலம் போகட்டும் அப்புறம் படத்தை ஆரம்பித்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார் இதனால் கடுப்பான மும்பை நடிகை படத்திலிருந்து விலகி அமெரிக்கா சென்று விட்டார்.
அந்த நடிகை வேறு யாரும் அல்ல விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பூஜா குமார் தான் முதலில் சின்னத்தம்பி படத்தில் நடிக்க அறிமுகமானார் ஆனால் அவர் விலகியது அடுத்து அவர்கள் பதிலாக ரோஜா கமிட் ஆனாராம் சின்னராஜா படத்தில் பூஜா குமார் நடித்திருந்தால் இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக ரவுண்டு வந்திருப்பார் என பலரும் கூறுகின்றனர்.