தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரையை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை உச்ச நட்சத்திர நடிகர்களுடன் படங்களில் நடிப்பது அல்லது சோலோ கதைகளில் உள்ள படங்களில் நடிப்பதால் இவருடைய வெற்றி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
தற்பொழுது கூட வருடத்திற்கு குறைந்தது மூன்றிலிருந்து நான்கு படங்கள் வரை பணி வருகிறார் அப்படி நயன்தாரா கைவசம் ஜவான், நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக ஜவான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் போய்க்கொண்டிருக்கிறது.
இப்படி திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டிருக்கும் நயன்தாரா, ஷூடிங்ஸ் பாட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக தனது படப்பிடிப்பை சொல்வார் என தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட நயன்தாரா ஒரு தடவை படப்பிடிப்பு தளத்தில் கத்தி மற்ற நடிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அது குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் உலா வருகிறது.
சமீபத்தில் நடிகை சுஹாசினி மணிரத்தினம் நடத்திய நேர்காணல் ஒன்றில் விக்னேஷ் சிவனிடம் நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது எப்பொழுது என கேட்டார் இதற்கு பதில் அளித்த அவர்.. நானும் ரவுடிதான் படத்தின் இரண்டாவது ஷெட்யூலின் போது தான் நாங்கள் டேட்டிங் செய்ய தொடங்கியதாக தெரிவித்தார். மேலும் அந்த படத்தில் விஜய் சேதுபதி அம்மா கேரக்டரில் ராதிகா நடித்திருப்பார் அது மட்டும் இன்றி அந்த கேரக்டருக்கு தன் தாயின் பெயரான மீனாகுமாரி பெயரை சூட்டியதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் ஷூட்டிங்கில் ராதிகாவுக்கு தெரியாமலேயே நானும் நயனும் காதலித்து வந்ததாக விக்னேஷ் சிவன் தெரிவித்தார். ஒரு தடவை நானும் ரவுடிதான் படத்தின் சூட்டிங் பொழுது நயன்தாரா சைலன்ஸ் என கட்டியதைக் கேட்டு என்ன இந்த பொண்ணு சைலன்ஸ் லாம் சொல்றா சத்தமா.. இதை கேட்டு பதிறி போய் ராதிகா என்னிடம் சொன்னதாகவும் நிஜமாகவே நயன்தாரா டெரரான ஆளா என சுஹாசினி கேட்டதற்கு விக்னேஷ் சிவன் சொன்னது.. சிரித்தபடி ஆம் என விக்னேஷ் சிவன் சொன்னார்.
நயன்தாரா எவ்வாறு கத்தினார் என்பதை சொல்லிக் காண்பித்தார் அது மட்டும் இன்றி நான் தான் இந்த மாதிரி கத்துவேன் என்னை விட ஜாஸ்தி கத்துற இந்த பொண்ணு நிஜமாகவே என்னை விட டெரரா இருப்பாரு போல என நயன்தாரா பற்றி ராதிகா தன்னிடம் வியந்து பேசியதாகவும் நேர்காணலில் விக்னேஷ் சிவன் கூறினார்.