கன்னட சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் ரக்சித்தா ராம் இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த புல்புல் என்ற கன்னட திரை படத்தின் மூலம்தான் முதன்முதலாக சினிமாவில் கதாநாயகி ஆனார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
மேலும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கன்னட சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அந்தவகையில் ஏகப்பட்ட கன்னட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் இந்நிலையில் இவர் நடித்துள்ள லவ் யூ ராச்சூ என்ற கன்னட திரைப்படமானது நல்ல வரவேற்ப்பை ரசிகர்களிடையே பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அஜய் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் பற்றி செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது பத்திரிகையாளர்கள் காதல் காட்சிகளில் கதாநாயகனுடன் மிக நெருக்கமாக நடிப்பது பற்றி அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நமது நடிகை இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் திருமணம் ஆகி இருக்கும் என நான் நம்புகிறேன்.
அந்தவகையில் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இதை நினைத்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம் முகம் சுளிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அப்பொழுது அவர் கேட்ட கேள்வி என்னவென்றால் முதலிரவில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் ரொமான்ஸ் தானே செய்வார்கள் அதைதான் இந்த திரைப்படத்திலும் காண்பிக்கப்பட்டது என கூறி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் காதல் காட்சிகளில் நான் மிக நெருக்கமாக நடிப்பதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். ஆகையால் அந்த திரைப்படத்தை முழுமையாக பார்த்தால் மட்டுமே அதற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என பத்திரிகையாளர்களின் மூக்கை உடைக்கும் படி பதிலளித்துள்ளார்.