சன் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை.! வருத்தத்தில் ரசிகர்கள்.. அவரே வெளியிட்ட பதிவு.!

sun-tv-actress
sun-tv-actress

முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி தொடரில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியதால் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்து வருகிறனர். சன்டிவி தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி அதோடு மட்டுமல்லாமல் இளம் நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையின் பிரபல சீரியல்களில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த அவர்தான் நடிகை பிரீத்தி குமார்.  இவர் சீரியலில் அடிப்பதற்கு முன்பே சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு இவர் முதன் முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் தொடரான ஆபீஸ் சீரியலின் மூலம்தான் நடிகையாக அறிமுகமாகிவுள்ளார்.

இவரின் சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் லக்ஷ்மி கல்யாணம், வள்ளி,  பிரியமானவள்,கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் தொடரில் நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை,  சுந்தரி நீயும் சுந்தரன் நானும் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.  இவர் நெகட்டிவ் மற்றும் நகைச்சுவை ரோலில் தான் பெரும்பாலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரின் எதார்த்தமான நடிப்பால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்த வானத்தைப்போல தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ப்ரீத்தியின் கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.எதிர்பாராத விதமாக சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகவுள்ளார் என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் பெரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

preethi kumar
preethi kumar