தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றது மட்டும் இல்லாமல் கலவையான விமர்சனத்தை பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இன் நிலையில் தற்போது உள்ள ரசிகர்களுக்கு பிடித்தபடி ஒரு திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என ஒற்றை காலையில் என்ன ரஜினிக்கு நெல்சன் உறுதுணையாக ஒரு கதையை கொண்டு வந்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த வருகிறார்.
இவ்வாறு மிகுந்த அளவு எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த திரைப்படத்தின் சூட்டிங் இம்மாதம் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் எப்பொழுது இந்த திரைப்படத்தில் இணைவார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது அதற்கான தேதிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது அதாவது ஆகஸ்ட் 15 தேதி அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் தொடரும் என கூறியுள்ளார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய நடிகை ஒருவர் நடிப்பதை உறுதி செய்துள்ளார்கள் அதாவது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படையப்பா திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் உடன் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் வரலாறு காணாத இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் இணைவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.