தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன், இவர் இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வி கொடுக்காத இயக்குனர் என்ற பெயரை எடுத்துவிட்டார், அதேபோல் வெற்றிமாறன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, அதனால் வெற்றிமாறன் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் தனி இடம் இருக்கிறது.
அந்த வகையில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது, அதேபோல் தனுசை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்த்திய இயக்குனர்களில் அதிகப்பங்கு வெற்றிமாறனுக்கு இருக்கிறது. அதேபோல் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் எப்பொழுது இணைவார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து அஜ்னபி என்ற நாவலைத் தழுவி ஒரு திரைப்படத்தை எடுக்க இருக்கிறார், இந்த திரைப்படம் முடிந்ததும் வெற்றிமாறன் கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கயிருக்கிறார்.
இப்படி வெற்றிமரன் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் தமிழ்சினிமாவில் வெற்றிமாறனுக்கு தனி இடம் தனி மரியாதை இருக்கிறது ரசிகர்களிடம், இந்த நிலையில் வெற்றிமாறனை பிரபல நடிகை ஒருவர் பேசக்கூடாத கெட்ட வார்த்தைகளால் அசிங்க அசிங்கமாக பேசியது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
அவர் வேறு யாரும் இல்லை வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகிய வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர் தான், வடசென்னை திரைப்படம் முதல் பாகம் மாபெரும் ஹிட்டடித்தது, இந்த முதல் பாகத்தில் தனுஷ், சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்,
இந்தநிலையில் வடசென்னை திரைப்படத்திறகாக ஆடிஷன் கிடைத்துள்ளது அந்த ஆடிஷனில் ஹீரோயின் தேர்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது இயக்குனர் வெற்றிமாறன் ஐஸ்வர்யா ராஜேஷிடம் உன்னால் எந்த அளவு கெட்ட வார்த்தை பேச முடியுமா அந்த வார்த்தைகளால் என்னை திட்டு என கேட்டு வாங்கிக் கொண்டாராம். அவர் திட்டியதை பார்த்து இயக்குனர் வெற்றிமாறனும் பட வாய்ப்பை தூக்கி கொடுத்து விட்டாராம்.