90 காலகட்டத்தில் கமல், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகை ஒருவர் நவரச நாயகன் கார்த்திக்கின் திரைப்படம் ஒன்றில் கூட நடிக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் நடிகர் நவரச நாயகன் மற்றும் அந்த நடிகை பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அது வேறு யாருமில்லை இடுப்பழகி சிம்ரன் தான் இருபது வயதில் நடிகர் கார்த்திக் உடன் நடிக்க முடியாத நடிகை சிம்ரன் தற்பொழுது 46 வயதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் கார்த்திக் அந்த காலகட்டத்தில் அம்பிகா, ராதா, அமலா, ரம்பா, நக்மா என பல நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தும் நடிகை சிம்ரன் நடிக்க முடியாமல் போய் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் 25 வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் சிம்ரன் முதன்முறையாக கார்த்திக் உடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அதாவது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தாந்தகன். இந்த படத்தில் பிரசாந்தின் தந்தையாக தியாகராஜன் இயக்கிய தயாரித்து உள்ளார்.
எனவே இந்த படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிம்ரன் சமீப காலங்களாக அம்மா கதாபாத்திரத்திலும் நடித்த வருகிறார் அதோடு மட்டுமல்லாமல் வாரணமாயிரம், ராக்கெட்ரி போன்ற திரைப்படங்களில் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த படத்தில் பிரசாந்துக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இது மட்டும் உண்மை என்றால் முதன் முறையாக நடிகர் கார்த்திக் மற்றும் சிம்ரன் ஜோடி போட்டு நடிக்கும் முதல் திரைப்படம் இதுவே ஆகும் எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்.