தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிகையும் சீரியல் நடிகையுமான பிரபலம் ஒருவர் வயதான காலத்தில் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிறகு பெரிதாக பிரபலம் கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை பிரகதி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியல் மாமியாராக நடித்த ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பெற்றார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் இதனை அடுத்து இன்னும் சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்டுல விசேஷம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு சில தமிழ் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு இவருக்கு வயதாகி இருந்தாலும் தற்பொழுதும் மாடனுடையில் கலர் கலரான புடவைகள் அணிந்து கொண்டு ஹிட் பாடலுக்கு ஆட்டம் போடுவது என இணையதளத்தில் பிஸியாக இருந்து வருகிறார். இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தன்னுடைய இருபது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர். இதனை அடுத்து தற்பொழுது இவர் தனியாக இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை பிரகதி மறுமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் கணவரை விட்டு பிரிந்த போது எனக்கு ஆறுதல் கூற அரவணைத்து வழி நடத்த ஒரு விசுவாசமான நண்பனாக இருக்க ஒரு உறவு தேவைப்பட்டது ஆனால் அப்படிப்பட்ட ஒருவரை நான் சரியான நேரத்தில் சந்தித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் இப்பொழுது எனக்கு 47 வயதாகிவிட்டது.
எனவே மறுமணத்தை பற்றி என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்து விட்டேன். இதற்கு மேல் ஒரு துணையைத் தேடுவது என்பது சரியானதாக இருக்காது சில சிக்கல்கள் வரும் பொழுது நான் மிகவும் பிடிவாதமாக இருந்து சமாளித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.