விக்ரமுடன் அந்த கிஸ் சீனில் நடிக்கும் பொழுது வாந்தி தான் வந்தது.! விக்ரமுடன் நடித்த அனுபவத்தை கூறிய பிரபல நடிகை..

meera-1
meera-1

நடிகர் சியான் விக்ரமுடன் முத்தக் காட்சியில் நடிக்கும் பொழுது எனக்கு ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என நடிகை ஐஸ்வர்யா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா பழம்பெரும் நடிகை லட்சுமி என் மகள் ஆவார்.

இவருடைய உண்மையான பெயர் மீனா சினிமாவிற்காக ஐஸ்வர்யா என தனது பெயரை மாற்றிக் கொண்டார் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த ஐஸ்வர்யா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்தார்.

பிறகு பட வாய்ப்புகள் குறை தொடங்கிய காரணத்தினால் குணசத்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார் மேலும் சின்னத்திரை சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் நிறைவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு வரும் ஐஸ்வர்யா வீடு வீடாக சென்று சோப்பு விற்பனை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரமுடன் நடித்தது குறித்த அனுபவம் பற்றி கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, 1992ஆம் ஆண்டு ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மீரா. இந்த படத்தில் நானும் விக்ரமும் நடித்து இருந்தோம் அப்பொழுது தான் விக்ரமுடன் கிஸ்ஸிங் சீன் எடுக்கப்பட்டது உண்மையில் சொல்லப்போனால் மிக கொடூரமாக இருந்தது அது ரொமான்ஸ் கிஸ் கிடையாது வீனஸ் ஸ்டுடியோவில் முழங்கால் அளவில் தண்ணீர் இருக்கும் அதில் டெக்னீசியன் கேமரா மேன் எல்லோரும் காலை வைத்து இருப்பார்கள் அந்த தண்ணீரில் விக்ரம் என்னை முக்கி எடுத்து ஒரு கோபத்தில் கொடூரன் மாதிரி முத்தக்காட்சி.

aishwariya
aishwariya

அப்பொழுது எனக்கு வாயில் தண்ணீர் விக்ரமுக்கு மூக்கில் தண்ணீர் ஏறி ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதில் எங்களுக்கு ரொமான்ஸ் எப்படி வரும் வாந்தி தான் வந்தது எப்படியோ அந்த காட்சியை எடுத்து முடித்தார்கள் அது ரொம்ப கஷ்டமான ஒன்றாக இருந்தது உண்மையை சொல்ல போனால் நானும் விக்ரமும் பயங்கரமாக சண்டை போடுவோம். நான் கெனி என்று தான் விக்ரமைக் கூப்பிடுவேன் ஆரம்பத்தில் பயங்கர சண்டை போடுவோம் மீரா படம் எடுக்கும் பொழுது எனக்கும் கெனிக்கும் ஆகவே ஆகாது.

கீரி, பாம்பு மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் செட்டில் உள்ள எல்லோரும் சமாதானப்படுத்துவார்கள் அந்த அளவுக்கு இரண்டு பேருக்குமே செட்டாகாது. அதற்குப் பிறகு ஒரு நாள் ஷூட்டிங்கில் கெனியும் நானும் பேச ஆரம்பித்தோம் அப்பொழுது எங்களுக்குள் நட்பு உருவானது இதையெல்லாம் மறக்க முடியாது என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.