அப்பொழுதே கேப்டனுக்கு மொத்த சொத்தையும் விற்ற பிரபல நடிகை.! எதற்காக தெரியுமா

vijayakanth
vijayakanth

தமிழ் சினிமாவில் கமல், ரஜினிக்கு, அடுத்ததாக நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான் உள்ளார். இவர் தமிழில் உள்ள பல பிரபலங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களால் ஒரு நடிகை நஷ்டத்தை சந்தித்துள்ளார் என்று யாருக்குத் தெரியும்.

ஆம் ஒரு நடிகை நடிகர் விஜயகாந்த் உடன் காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் பானுப்பிரியா. 80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் பானுப்பிரியா இவருக்கு விஜயகாந்த் என்றாலே ரொம்பவும் பிடிக்கும் இதனால் விஜயகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அதற்கு விஜயகாந்த் சம்மதம் தெரிவித்தார்.

அதன் பிறகு பானுப்பிரியா அவர்கள் பல கோடி செலவில் அந்த படத்தை தயாரித்திருந்தார் ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியாமல் போனது ஏனென்றால் அந்த திரைப்படம் இன்று வரையிலும் ரிலீஸ் ஆகாமலே போய்விட்டது அதனால் பானுப்ரியா மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் அவருடைய கழுத்துக்கு கடன் தொல்லை நெறிக்க ஆரம்பித்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும் பானுப்பிரியா அவர்கள் அந்த நஷ்டத்தை சரி செய்வதற்காக தன்னுடைய சொத்து முழுவதையும் விற்று அந்த கடனை அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நடிகை பானுப்பிரியா சினிமாவில் வாய்ப்பு குறைய ஆரம்பித்த பிறகு சின்னதிரையில் நடித்தார்.

தற்போது அம்மா கேரக்டர்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வரும் பானுப்பிரியா இப்படி ஒரு நஷ்டத்தை சந்தித்தது பலருக்கும் புதிய தகவலாக இருந்து வருகிறது. சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் ஹீரோயின்கள் படம் தயாரிக்க முன்வருவது ஒன்றும் புதிதல்ல அப்படி தயாரிப்பாளராக மாறிய சாவித்திரி முதல் நயன்தாரா வரை பலரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு படம் தயாரிக்க ஆசைப்பட்டு  மிகப்பெரிய நஷ்டம் அடைந்த பானுபிரியா அடுத்தடுத்த படங்களை தயாரிக்க முன் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.