ரஜினி நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகிய பல வருடங்கள் ஆனாலும் கூட தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது. அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்ற திரைப்படம் தான் படையப்பா.
தற்போது வரையிலும் இந்த படத்தில் அவருடைய ஸ்டைல், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது இப்படிப்பட்ட நிலையில் படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் இரண்டாவது மகளாக நடித்த அனிதா வெங்கட் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.அதாவது அவர் கூறியதாவது படையப்பா திரைப்படத்தில் இரண்டாவது மகள் கேரக்டர் எனக்காகவே ரஜினி சார் அந்த டைரக்டரை உருவாக்கினார்.
நான் இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய கதை தான். ஏனென்றால் நான் ஆஹா படத்தில் விஜயகுமார் சாருக்கு மகளாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பக்கத்து சேட்டில படையப்பா சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் விஜயகுமார் அங்கு என்கிட்ட உனக்கு ரஜினி பிடிக்குமான்னு கேட்டாங்க நான் சார் என்ன இப்படி கேட்டுட்டீங்க என சொன்னேன் பிறகு சார் கூட்டிட்டு போனார்.
செட்டுக்குள் நுழைந்தால் ரஜினி சார் இருந்தார் எனக்கு அப்படியே ஷாக் ஆகிவிட்டது பிறகு விஜயகுமார் அங்கிள் ரஜினி சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் பிறகு என்னை அவர் உடனே என்னம்மா விஜயகுமாருக்கு தான் மகளான அடிப்பியா என்கூட நடிக்க மாட்டியா என்று கேட்டார். நான் அப்படியே நின்று விட்டேன் அப்புறம் அவர் நான் ஒரு நாள் கூப்பிட்டு அனுப்புகிறேன் என்று சொல்லிட்டு போய்ட்டார்.
அதன் பிறகு கொஞ்ச மாசம் கழித்து அப்பாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது அதுல அண்ணாச்சியில் சினி கிரியேஷன்ஸ் அப்ளிகேஷனுக்கு வரணும்னு இருந்தது. நாங்க நம்பவே இல்லை அங்க போனோம் அங்கு கே எஸ் ரவிக்குமார் சார் இருந்தார். என்னை சேலை கட்டிட்டு வர சொல்லிட்டாங்க நான் ரொம்ப சின்ன பெண்ணாக இருந்ததால் என்ன வேண்டுமானு சொல்லிட்டாங்க அப்புறம் ப்ரீத்தா புக் பண்ணாங்க நான் பார்க்க சின்ன பெண்ணாக இருந்ததால் என்னை வேண்டாம் என கூறி விட்டாங்க அப்புறம் நாங்க ரஜினி சார் கிட்ட சொன்னபோது அவர் பீல் பண்ணி இருந்தாரு இல்லை நான் அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்தேன் எனக்கு ரெண்டு பொண்ணு மாதிரி கதையை மாத்திக்கோங்க என்று சொல்லி உள்ளார்.
அப்படித்தான் எனக்கு இந்த படத்தின் நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்துள்ளது இந்த பொண்ணு எனக்கு மகளாக நடுகிறார் எனக்கு இவர் மகள் மாதிரி தான் எனக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்களோ அதை இந்த பொண்ணுக்கும் கொடுக்க வேண்டும் என சொல்லிவிட்டார் அதன் பிறகு செட்டில் இருப்பவர்கள் அனைவரும் என்னை தடபுடலாக கவனித்துக் கொள்வார்கள். மேலும் ஐஸ்கிரீம், ஜூஸ் என அனைத்தையும் வாங்கி தருவார்கள்.
இதெல்லாம் அனுபவிக்கலாமா வேண்டாமா என யோசிப்பேன் அந்த அளவுக்கு மரியாதை ஒருநாள் செட்டில் ரஜினி சார் கூப்பிட்டு நீ நல்லா பாடுவியா எனக்கு ஒரு பாட்டு பாடு என்று நான் உடனே ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை பாடினேன் பாடிக் கொண்டிருக்கும் பொழுதே செட்டுக்குள் ஒரு கேக் வந்தத அன்னைக்கு என்னுடைய பிறந்தநாள் பிறகு கேக் வெட்டி விட்டேன் என்னுடைய அம்மா வரும்பொழுது அவரிடம் ரூபாய் 10 ஆயிரம் பணம் கொடுத்து குழந்தைக்கு என்ன வேணுமோ அதனை வாங்கி தாங்க என சொல்லிவிட்டார் இவ்வாறு இதை தற்பொழுது வரையிலும் என்னால் மறக்க முடியாத நினைவுகள் என அனிதா வெங்கட் கூறியுள்ளார்.