தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரித்தும் வருகிறார் வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளிவந்தது இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்த நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஐந்து நிமிடங்கள் நடித்திருந்தார் இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதலும் கவனத்தை ஈர்த்தது. இவ்வாறு தற்பொழுது இவர் வாடிவாசல், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் உள்ளிட்ட மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் முன்னணியின் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யாவை பற்றி பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பொதுவாக முன்னணி நடிகர்களின் சில திரைப்படங்களில் ஏதாவது ஒரு ஐட்டம் பாடல் இடம்பெறுவது வழக்கம்.
மேலும் அந்தப் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் அந்த பாடலில் நடிக்கும் நடிகர்கள் பல கோடி சம்பளம் பெறுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக சமீபத்தில் சமந்தா, அஞ்சலி போன்ற நடிகைகள் இது போன்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்கள்.
அதுபோல் அஞ்சான் படத்தில் கரீனா கபூர் நடனமாட வைக்கலாம் என அவரை பார்ப்பதற்காக படக்குழுவினர்கள் சென்றதாகவும் அதற்காக சூர்யாவை யார் என்று தெரியாது எனவும் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் அது குறித்த சம்பவத்தில் கரீனா கபூர் பேசுகையில் நான் சூர்யாவை பார்த்தது இல்லை அதனால் தான் அவரை தெரியாது என்றேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது எனக்கு தெரியும் என சமாளித்து உள்ளார்.