பொங்கலுக்கு விஜயுடன் தில்லாக ஒத்தைக்கு ஒத்தையாக மோத இருக்கும் பிரபல நடிகர்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

vijay
vijay

4 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் படத்துடன் மோதிய பிரபல நடிகரின் படம் மீண்டும் அடுத்த ஆண்டு பொங்களுக்கு மீண்டும் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாம் அனைவருக்குமே தெரியும். அதே நேரத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ் நடித்து உள்ள காடுவெட்டி திரைப்படம்  பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படமும் ஆர் கே சுரேஷ் நடிப்பில் வெளியான பில்லா பாண்டி திரைப்படமும் 2018 ஆம் தீபாவளி பண்டிகையில் மோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துடன் மோத இருக்கிறார் ஆர் கே சுரேஷ் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது இந்த நிலையில் ஆர் கே சுரேஷ் நடித்திருக்கும் காடுவெட்டி திரைப்படம் வெளியாக இருக்கிறது இதில் எந்த திரைப்படம் தோல்வியை சந்திக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும்  ஆர் கே சுரேஷ் தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை சோலை ஆறுமுகம் இயக்கி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில்  ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சதீக் இசையமைத்துள்ளார்.