கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெளி மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அறிந்த சினிமா பிரபலங்களும் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நடிகர் சோனு சூட் அவர்கள் ஊரடங்கு ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்றுவரையிலும் அவரால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.அந்த வகையில் அனைத்து மக்களுக்கும் அவரால் முயன்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீபகாலமாக கூலி தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பண உதவிகளும் செய்து வந்தார்.
நிலையில் தற்பொழுது கேரளாவில் வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த பெண் கூலி தொழிலாளர்கள் 150 பேர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்து வந்தனர் இதனை அறிந்த சோனு சூட் அவர்கள் அந்த கூலித்தொழிலாளி 150 பெண்கள் மற்றும் குழந்தைகளையும் மீட்க தனது சொந்த செலவில் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்து மீட்டுள்ளார் சோனு சூட்.
![sonu sood](https://www.tamil360newz.com/wp-content/uploads/2020/05/sonu-soot.jpeg)
அந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் புறப்பட்டு இன்று காலை 8 மணிக்கு ஒடிசா சென்றடைந்தது.இதனை அறிந்த பல தரப்பு மக்கள் சோனு சூட் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கூலித்தொழிலாளர்கள் விமானத்தில் சென்றது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.