விஜய்சேதுபதியை முந்திய பிரபல நடிகர்..! இந்த வருடத்தில் மட்டுமே 50 படங்கள்.! யார் அது தெரியுமா.?

vijay-sethupathy-
vijay-sethupathy-

சினிமா உலகில் கொடுக்கின்ற கதாபாத்திரத்தில் தனது முழு திறமையையும் சூப்பராக வெளிப்படுத்தி வெற்றியை ருசிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஏராளமாக குவியும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது விஜய் சேதுபதி தொடர்ந்து ஹீரோ, வில்லனாக நடித்து பட வாய்ப்பை அள்ளி வருகிறார்.

ஆனால் இவரை விடவே ஒரு நடிகர் இந்த வருடத்தில் மட்டுமே சுமார் 50 படங்கள் கிட்டத்தட்ட நடிக்கிறார் அந்த நடிகர் வேறு யாருமல்ல அடிக்கடி நடிகர் யோகி பாபு தான். இவர் சினிமா உலகில் முதலில் காமெடியனாக தன்னை தலை காட்டிக் கொண்டாலும் நாட்கள் போகப்போக இவருக்கு ஹீரோவாக நடிக்கும் கதைகளும் வந்தன..

அதை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது வெற்றி ருசித்து வருவதால்.. தற்போது நடிகர் யோகி பாபுவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  இவர் தொடர்ந்து  காமெடியனாகவும், ஹீரோவாகவும் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிக்கின்றன. இப்பொழுது கூட யோகி பாபு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர  நடிகர்களான பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அஜித்தின் 61, ஷாருக்கானின் ஜவான் , விஜயின் வாரிசு போன்ற படங்களில் நடிக்கிறார். மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கூட நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது இது தவிர ஹீரோவாகவும் இந்த வருடத்தில் நடித்து வெற்றி கண்டுள்ளார் இந்த வருடத்தில் யோகி பாபு 11 படங்களில் நடித்து முடித்து விட்டார்.

இது இல்லாமல் 39 படங்கள் கைவசம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்றார் போல தற்போது சற்று சம்பளத்தை உயர்த்தி ஓடிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல டாப் காமெடி நடிகர்கள் இருந்தாலும்  காமெடி நடிகர் யோகி பாபுவின் இடத்தை பிடிக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.