90 காலகட்டத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல நடிகர்.! இப்ப அவர் இயக்குனர்.

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தைப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போ பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் டப்பிங் பணிகள் இன்னும் இருக்கின்றன அதை தீவிரம் காட்டி உள்ளார்.

விஜய் அதை முடித்துவிட்டு அடுத்ததாக தனது 66வது திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையிலும்  விஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டு லைனில் கியூவில் பல நடிகர் நடிகைகள் நிற்கின்றனர். ஆனால் சில பிரபலங்களும் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டு உள்ளனர்.

இப்பொழுது நடிக்கும் நடிகர்களை விட அப்போதைய காலகட்டத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த டாப் நடிகர். அந்த  வகையில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை 90 காலகட்டங்களில் அதாவது 1997 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான நேருக்கு நேர் இந்தத் திரைப்படத்திற்கு பிரபுதேவா தான் நடிக்க இருந்தாராம் ஆனால் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டாராம்.

நேருக்கு நேர் திரை படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கும் போது படத்தில் நடிப்பதற்காக பல்வேறு நடிகர்கள் ஒப்பந்தமாகி பின் மாறி உள்ளனர். இவர் திரைப்படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் அஜித்  தான் இந்த படத்தில் நடிகை இருந்தார் பின் ஏதோ ஒரு காரணங்களால் விலகவே அடுத்ததாக பிரபுதேவாவை சந்தித்துள்ளது.

அவரும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்காமல் போக இயக்குனர் வசந்த் கடைசியாக சூர்யா, விஜயை வைத்து கடைசியாக படத்தை வெற்றிப் படமாக எடுத்துக் கொடுத்துள்ளார். அதன்பின் விஜயுடன் இணைந்து பிரபுதேவா  பல்வேறு படங்களில் அவருடன் சேர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தில் பணியாற்றி தான் இருக்கிறார்.