“பீஸ்ட்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்த பிரபல நடிகர்.! யார் அந்த ஹீரோ தெரியுமா.? சுவாரஸ்யமான தகவல் இதோ.

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வெற்றி நடை கண்டு வரும் நடிகர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார் அதற்கு காரணம் அவர் கதைகளை நல்ல படியாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விதம் தான். அதன்பிறகு இவர் ஒவ்வொரு படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிப்பது கைவந்த கலை.

அதனால் அந்த படங்கள் ஒவ்வொன்று சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதோடு மட்டுமல்லாமல் வசூலில் வாரி குவிப்பதால் தற்போது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் விஜயை நம்பி மிகப்பெரிய பட்ஜெட்டை போடுகின்றனர்.

அதைத் தாண்டியும் வசூல் குவிக்கின்றன அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் தெலுங்கு படத்திலும் மிகப்பெரிய ஒரு பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளார் இது இப்படியிருக்க பீஸ்ட் திரைப்படத்தின் எதிர்பார்ப்போ தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் சூட்டிங் இரண்டாம் கட்ட ஷூட்டிங் கோகுலம் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டு வருகிறது அதே இடத்தில் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தளபதி விஜய்யை பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நேரில் பார்த்து உள்ளார். மேலும் சிறிது நேரம்  இருவரும் கலந்து பேசி உள்ளனர் என செய்திகள் வெளியாகின்றன.

இருவருக்கும் இடையே ஏற்கனவே நல்ல புரிதல் இருந்த நிலையில் இருவரும் இப்பொழுது பேசி உள்ளது சினிமா வட்டாரங்கள் மத்தியில் தற்போது பலருக்கும் நல்ல செய்தியாகவே பார்க்கபடுகிறது. இச்செய்தியை ரசிகர்கள் வேற லெவலில் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.