தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் தனது திரைப்படங்களில் கடினமாக உழைத்து வருகிறார் அதற்கு ஏற்றார் போல அவருடைய படமும் வெளிவந்து வெற்றியை பதிவு செய்கின்றன. கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் ஆக்சன் காமெடி மெசேஜ் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது
மேலும் வசூலில் 260 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது.. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62 ஆவது திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். திரை உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிப்பாட்டிக் கொண்டு ஓடுகிறார் அதுதான் அவருக்கு பலமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவரை பார்க்க பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அவ்வப்போது அஜித்தும் அவர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். அப்படி ஒரு நடிகர் அஜித்தை சந்தித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருப்பவர் போஸ் வெங்கட்.. இவரும் இயக்குனர் சிறுத்தை சிவாவும் நல்ல நண்பர்கள். சிறுத்தை சிவா அஜித்தை வைத்து வீரம் படத்தை எடுத்து முடித்துவிட்டு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்தார். வீரம் படத்தில் போஸ் வெங்கட் பேச வந்துள்ளார் அப்பொழுது சிறுத்தை சிவாவிடம் நான் அஜித்தை பார்க்க முடியுமா என கேட்டுள்ளார்.
சிறுத்தை சிவாவும் அஜித் இடம் பேசி பர்மிஷன் வாங்கினாராம் பிறகு ஒரு மணி நேரத்தில் அஜித் உங்களை கூப்பிடுவார் என சொல்லி உள்ளனர் போஸ் வெங்கட்டும் அஜித்தை போய் பார்க்க ரெடியாக இருந்தாராம். கதவை திறந்த அஜித் ஹாய் போஸ் என கூறியிருக்கிறார். இதைக் கேட்ட உடனேயே சற்று பதட்டமாகிவிட்டாராம். ரிலாக்ஸா உட்காருங்க.. நான் ஒரு நடிகர் என்பதை மறந்து ஒரு சாதாரண மனுஷன் போல் என்னிடம் பேசுங்கள் என கூறி இருக்கிறார் அப்பவும் போஸ் வெங்கட்டுக்கு பயம் போகவில்லையாம்.
கடைசியாக அஜித் நானே ஸ்டிரஸா தான் இருக்கேன் மேலும் என்னை ஸ்டிரஸா ஆக்காதீங்க என கூறி உள்ளார் பிறகு இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்தனர் அதன் பின் விசுவாசம், வேதாளம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கேட்டுக்கு சென்றதாம் ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனதாக போஸ் வெங்கட் வெளிப்படையாக சொல்லி உள்ளார்