திரையில் வெளியாவதற்கு முன்பாகவே சிம்புவின் மாநாடு ரீமேக்கில் நடிக்க துடியாய் துடிக்கும் பிரபல நடிகர்..!

manadu-2
manadu-2

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு இவர் சமீபத்தில் சிம்புவை வைத்து மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இத் திரைப்படமானது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என நினைத்து நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாவதன் காரணமாக இத்திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இந்நிலையில் நடிகர் சிம்பு தொடர் தோல்வி திரைப்படங்களை கொடுத்த வகையில் தற்போது இத்திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படம் ஆனது நல்ல கதைக்களம் உள்ள திரைப்படமாக இருப்பதன் காரணமாக ரசிகர் மத்தியில் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இவ்வாறு இத்தனை படம் வெளியாவதற்கு முன்பாகவே இந்த படத்தை ரீமேக் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் ரீமேக்கில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன இதற்காக மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் எடிட்டரை நேரில் அழைத்துள்ளாராம் அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தை  ஆந்திராவில் அல்லு அர்ஜுன் பார்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

manadu-1
manadu-1

பொதுவாக தமிழ் திரைப்படங்கள் இதர மொழிகளில் ரீமேக் செய்வது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் சிம்புவின் மாநாடு திரைப்படமும்  இடம் பெற்றுள்ளது. பொதுவாக மாநாடு திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி திரைக்கு வர உள்ள நிலையில் இத்திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்ய உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.