பொதுவாக சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது எந்த அளவிற்கு வழக்கமாகி விட்டதோ அதேபோலத்தான் படங்களில் முத்த காட்சிகள் இல்லாமல் எந்த ஒரு படங்களும் வெளியாவதில்லை. அப்படி ஒரு திரைப்படத்தில் முத்த காட்சிக்கு மட்டும் 50 டேக்குகள் எடுக்கப்பட்டது என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஆம் 2019ல் வெளியான வேற என்ன வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் நரேன் ராம்தேஜ் அதேபோல இந்த படத்தில் பிரெர்ணா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் அவர்கள் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் கடந்த தலைமுறைகளுக்கும் இந்த தலைமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் யாரும் அடிமையாகக் கூடாது என்பது இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஒரு முத்த காட்சி இடம் பெற்று இருக்கிறது.
முதலில் இந்த முத்தக் காட்சியை வேண்டாம் என நடிகை பிரெர்ணா கூறி இருக்கிறார் ஆனால் இந்த காட்சி சில நிமிடங்கள் மட்டும் தான் என அந்த படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார் இதனால் முத்த காட்சிக்கு ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த படத்தில் நடித்த கதாநாயகனும் கதாநாயகியும் புதுமுகநடிகர், நடிகைகள் என்பதால் முத்தக் காட்சியில் நடிக்க பதட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் முத்த காட்சி சரியாக வராததால் அந்த முத்த காட்சிக்காகவே 50 டேக்குகள் எடுத்ததாக இயக்குனர் சிவபாரதி குமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 50 டேக்குகள் சென்றதால் அவர் இனிமேல் நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்ற சந்தேகம் இருந்தது ஆனால் இவ்வளவு டேக்குகள் போகியும் மறுநாள் வந்திருக்கிறார் என்று இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை அவர் படத்தின் பிரமோஷனுக்காக தான் சொல்லி இருக்கிறார் என்று தற்போது தான் தெரிகிறது. மேலும் 50 முறை முத்த காட்சி என்பது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது என்று தற்போது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.