தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரெஜினாவிற்கு பிரபல நடிகர் ப்ரொபோஸ் செய்துள்ள நிலையில் அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது நடிகை ரெஜினா கேசட்ரா சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடினார் எனவே பிறந்த நாளன்று நடிகர் சந்தீப் கிஷன் ப்ரொபோஸ் செய்துள்ளார்.
அதாவது சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரெஜினா தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசன், மிஸ்டர் சந்திர மௌலி, சிலுக்குவார் பட்டி சிங்கம், பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை, கசடதபற, தலைவி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.
இவ்வாறு இவருடைய நடிப்பில் கடைசியாக 1945 என்ற திரைப்படம் வெளியானது மேலும் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வரும் ரெஜினா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் என எட்டுக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ரெஜினா தன்னுடைய 32 வது பிறந்த நாளை கொண்டாடினார்.
எனவே ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வந்தார்கள் அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தீப் கிசனும் நடிகை ரெஜினாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதாவது ரெஜினா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே பாப்பா.. லவ் யூ.. எப்பொழுதும் சிறந்தே நடக்க வேண்டும் மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.
எனவே இதனை பார்த்தவுடன் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ரெஜினா இருவரும் காதலிப்பதாக கூறி வருகிறார்கள். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இவர்கள் காதலிக்க தொடங்கியதாகவும் பிறகு டேட்டிங் எல்லாம் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.