சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம் என நடிகை கீர்த்தி சுரேஷுக்கு புகழாரம் சூட்டிய பிரபல நடிகர்.! அரங்கையே அதிர வைத்த ரசிகர்கள்..

keerthi-suresh
keerthi-suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது மேலும் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை நடிகர் ஜெயம் ரவி நிகழ்ச்சி ஒன்றில் கூறியது பற்றி தகவல் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்திவுடன் வந்திருந்தாராம் அப்பொழுது அவர்களுக்கு அருகில் கீர்த்தி சுரேஷ் இருந்திருக்கிறார்.

விழா நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு முக்கியமான போன் வரவே அவர் எழுந்து சென்று பேசியுள்ளார். போன் பேசிவிட்டு திரும்பி வரும்போது ஜெயம் ரவி உட்கார்ந்து இருந்த இடத்தில் வேற யாரோ ஒருவர் அமர்ந்திருக்கிறார் இதன் காரணமாக வேறு வழி இல்லாமல் கொஞ்சம் தள்ளி வேறு ஒரு சீட்டில் அமர்ந்திருக்கிறார். இதை பார்த்துக் கொண்டே இருந்த கீர்த்தி சுரேஷ் விருந்து சென்று ஜெயம் ரவியை அவரின் மனைவியுடன் உட்காருங்கள் என கூறி தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்.

எனவே இதனைப் பற்றி கூறிய ஜெயம் ரவி சினிமாவில் இடம் ரொம்ப முக்கியம் ஆனால் கீர்த்தி சுரேஷ் எனக்காக விட்டுக் கொடுத்து இருக்கிறார் என்று மிகவும் நகைச்சுவையாக பேசினார். இதனை கேட்டவுடன் அந்த அரங்கில் உள்ள அனைவரும் கைத்தட்டி சிரித்துள்ளனர் மேலும் இதனை பார்த்து கீர்த்தி சுரேஷ் சிரித்துக் கொண்டே இதனை சிறிது வெட்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவ்வாறு ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் பற்றியும் மிகவும் கிண்டலாக கூறியிருந்தாலும் கூட இது மிகவும் முக்கியமான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.