நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் கோப்ரா இந்த திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்தவர்கள் இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் 9 கெட்டப்பில் நடித்துள்ளார்.
இதற்கு முன்பாகவே அஜய் ஞானமுத்தவர்கள் இமைக்கா நொடிகள் மற்றும் டிமான்டி காலனி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி உள்ளார். மேலும் அந்த திரைப்படம்ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலை நேற்று திரையரங்குகளில் கோப்ரா திரைப்படம் வெளியாகி மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. மேலும் நடிகர் விக்ரம் அவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து விக்ரம் திரைப்படம் வெளியே வரவுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து கோப்ரா திரைப்படத்தை பார்க்க நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் நேற்று திரையரங்கிற்கு சென்றுள்ளார் அந்த படத்தை பார்த்து விட்டு வெளியே சென்றபோது அவருடைய ரசிகர்கள் அவருக்கு வெள்ளிக்கிழமை நாயகனே என்று பெயரிட்டு ஒரு போஸ்டரை கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு நடிகர் கூல் சுரேஷ் சுற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். கூல் சுரேஷ் படம் நன்றாக உள்ளது நடிகர் விக்ரம் அவர்கள் மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் அதன் பிறகு கமலஹாசனுக்கு அடுத்த உலகநாயகன் விக்ரம் தான் என்று கூறியவர் இதனால் பெரும் மகிழ்ச்சியில் அவருடைய ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் நடிகர்கள் கூல் சுரேஷ் அவர்கள் ஒரு சில தகவல்களை கூறியுள்ளார் அதிலும் மூன்று நடிகைகளையும் ஒரு நடிகை நேந்திர பழம், இன்னொரு நடிகை நேந்திரா சிப்ஸ் என்று அந்த மூன்று நடிகைகளையும் வர்ணித்துள்ளார். இந்த படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்துவை கூல் சுரேஷ் அவர்கள் கலாய்த்து தள்ளி உள்ளார்.
அதாவது ஒவ்வொரு படத்திற்கும் புது புது நடிகர்களை நடிக்க வைப்பது ஒன்றும் தப்பல்ல முதல் படத்தில் தமிழ் நடிகர்களை நடிக்க வைத்தீர்கள் அதன் பிறகு வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் ஆங்கில நடிகர்களை அடிக்க வைத்தீர்கள் தற்போது வெளியான கோப்ரா திரைப்படத்திலும் ஹாலிவுட் நடிகர்களை நடிக்க வைத்தீர்கள் அப்போது தமிழ் நடிகர்கள் நாங்க என்ன விரல் சப்புவதா என்று கூறியுள்ளார். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தமிழ் நடிகர்களை நடிக்க வையுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.