தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாகவும் அவர் ஒரு இயக்குனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது தமிழ் திரைவுலகில் மிகவும் பிசியாக இருந்து வரும் தனுஷ் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி நடைப் போட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான உறியடி விஜயகுமார் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
உறியடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் விஜயகுமார் இதனை அடுத்து உறியடி 2 படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது தனுஷ்வுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் இவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் கேப்டன் மில்லர் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.