மீண்டும் நயன்தாராவுடன் போட்டிபோட ரெடியாகும் பிரபல நடிகர்.! இவர் வந்தாலே கொடூரம் தான்.

nayanthara

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் வாங்கும் சம்பளத்திற்கு சமமாக ஒரு திரைப்படத்திற்கு பல கோடி சம்பளம் பெற்று வரும் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும் தான் இவர் மட்டும் தான் தமிழ் சினிமாவில் நடிகைகளில் மிகவும் அதிகமான சம்பளத்தை வாங்குகிறார்.பொதுவாக நடிகைகளுக்கு அதிகமான சம்பளம் தருவதில்லை ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு நயன்தாரா மிகவும் அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்குகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த நயன்தாரா அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து எப்படியோ ஒரு வழியாக தற்பொழுது மிகவும் பிரபலமாகி பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது.இந்த திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து இருந்தாலும் இவருக்கு வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர்தான் அஜ்மல் இவர் மீண்டும் நயன்தாராவுடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது நயன்தாரா தற்பொழுது நேரம்,பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடி போட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படத்திற்கு கோல்ட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ajmal
ajmal

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடிக்கலாம் என கூறிவருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திலும் நயன்தாராவுக்கு வில்லனாக அஜ்மல் நடித்தால் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் இந்த திரைப்படம் மிகவும் தரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடும்.