‘தளபதி 67’ படத்திற்காக ஹெவி ஒர்க் அவுட் செய்யும் பிரபல நடிகர்.! வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியை இருக்கிறது மேலும் இந்த படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய் தத், கௌதம் மேனன், விஷால், மிஷ்கின், நிவின்பாலி, திரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் பிறகு மன்சூர் அலிகானை அடுத்த படத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீப பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்பொழுது மன்சூர் அலிகான் வெறித்தனமாக தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி 67 உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் மன்சூர் அலிகான் பிஸியாக நடித்து வரும் இருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வொர்க் அவுட் செய்து வருவதாக கூறப்படுகிறது மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு டிசம்பர் மாதம் இறுதியில் தெரிய வைக்கப்படும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அந்த வகையில் நடிகர் விஜய் தற்பொழுது துபாயில் தன்னுடைய குடும்பத்துடன் ஓய்வெடுத்து வரும் நிலையில் அவர் இந்தியா திரும்பியதும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.