குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக கெத்து காட்டியவர் நடிகை மீனா இவர் தெலுங்கில் ஹீரோயின்னாக அறிமுகமானாலும் தமிழில் ஒரு புதிய கதை என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின்னர் ரஜினியின் முத்து, சத்யராஜ் உடன் தாய் மாமன், சரத்குமார் உடன் நாட்டாமை, கார்த்தியுடன் மருமகன், கமலுடன் அவ்வை சண்முகி என பல்வேறு டாப் நடிகர்களுடன் நடித்து..
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வெற்றி கண்ட இவர் 2009 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
இருப்பினும் அவ்வபொழுது பட வாய்ப்புகள் எட்டிப் பார்த்தன அந்த வகையில் சிறு இடைவெளிக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்தார். அந்த சமயத்தில் தான் உடல் நலக்குறைவு காரணமாக வித்தியாசாகர் இயற்கை எழுதினார் இதனால் மீனா வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மீனா பற்றிய செய்தி இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் நடிகை மீனாவின் அழகு மற்றும் திறமையை பார்த்து ஒரு தலைபட்சமாக பலர் காதலித்து உள்ளனர் ஆனால் தனக்கு சினிமாவின் முக்கியம் எனக் கூறி படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இருந்தும் ஒரு நடிகர் மீனாவை துரத்தி துரத்தி காதலித்து உள்ளார் அவர் வேறு யாரும் அல்ல பிரபுதேவா தான். மீனா அதற்கும் நோ சொல்லினார் பிறகு இருவரும் இணைந்து “டபுள்ஸ்” என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர்.
நெருக்கமான காட்சிகளும் இந்த படத்தில் இருந்தது அப்பொழுது தான் பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் என்று அவருடன் பணியாற்றிய சக நடிகைகள் கூற உடனே மீனா பிரபுதேவாவிடம் பேசுவதை குறைத்து பின் எஸ்கேப்பாகி வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்டாராம். பிரபுதேவாவும் பின் நயன்தாராவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.