தென்னிந்திய சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தன்னுடைய 67வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.
மேலும் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு என்ற தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள தகவலின் படி நடிகரும் இயக்குனருமான மனோபாலா இந்த தகவலை தன்னுடைய சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை இன்று சந்தித்ததாகவும் தளபதி விஜய் அதே எனர்ஜி உடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல் நாளே தூள் எனவும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இவரை அடுத்து அர்ஜுன் கௌதம் மேனன் சஞ்சய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள் முக்கியமாக இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.