சின்னத்திரையில் வாரம்தோறும் டிஆர்பி யில் டாப் லிஸ்டில் இடம்பிடிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் ஒரு குடும்ப ஒற்றுமையை மையமாக வைத்து பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் மக்கள் பலரும் விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த கதைக்களத்துடன் அமைந்துள்ள தொடர் ஆகும்.
தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்தின் பிறந்தநாளை வீட்டிலேயே எளிய முறையில் கொண்டாடி உள்ளனர். அப்போது உறவினர்கள் சிலரும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு வந்துள்ளனர் இந்த நேரத்தில் முல்லையின் மருத்துவ செலவிற்காக மூர்த்தி 5 லட்சம் ஒருவரிடம் கடன் வாங்கி உள்ள நிலையில் கடன்காரன் வீட்டிற்கு வந்து பணத்தை கேட்கின்றனர்.
அப்போது கையில் பணம் இல்லாததால் வேறு வழியின்றி ஜீவா அவரது மனைவி மீனாவிடம் இருக்கும் பணத்தைக் கேட்டு கடன்காரன் இடம் கொடுத்து உள்ளார் இந்த செய்தி மீனாவின் அப்பா அம்மாவிற்கு தெரியவர நீங்கள் கடன் வாங்கியதற்கு என் மகள் தான் கடன் அடைக்க வேண்டுமா என ஒருபக்கம் கேட்க..
மறுபக்கம் முல்லையின் கணவர் கதிரிடம் பொண்டாட்டி மருத்துவ செலவை பார்க்க உனக்கு வழி இல்லை என கதிரை அவமானப் படுத்தி உள்ளார் மீனாவின் அப்பா குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்ற நிலையில் பாண்டியன் ஸ்டோர் மூத்த மருமகள் தனம் தனது வளையலை கொழுந்தனார்களிடம் கொடுத்து இதை விற்று வந்து மீனாவிடம் அந்த பணத்தை கொடுத்து விடுங்கள் என கூறுகிறார்.
ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் தனத்தை நடிக்கிறியா என திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தியின் குடும்பம் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றன.