தற்பொழுது சினிமாவை விடவும் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் வெப்சீரிஸ் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஓடிடி வழியாக பல வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. சமீபத்தில்கூட அமலாபால் நடிப்பில் பிட்ட காதலு வெப் செரீஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து சமந்தாவும் த ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில் கூட சமந்தா இந்த வெப் சீரியலில் எப்படி நடிக்கிறார் என்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
அந்த வகையில் இதில் சமந்தா பயங்கரவாதியின் மகளாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். எனவே இந்த சீரியலில் சமந்தா அழகுக்கு முக்கியத்துவம் தராமல் பயங்கரவாதியாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது தே ஃபேமிலி மேன் 2 ட்ரைலர் அமேசான் தளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வையாளர்களை குவித்துள்ளது.
இதில் சமந்தா,பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர்.