கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் சம்பளத்தை பற்றி நாம் அவ்வளவு பெரிதாக தெரிந்து இருக்க மாட்டோம் ஆனால் அவர் எப்படி விளையாடுகிறார் எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பதை தெரிந்து வைத்து இருப்போம்.
ஆனால் தற்பொழுது கிரிக்கெட்டில் அதிக சம்பள விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதை விரிவாக நாம் பார்ப்போம். இதில் ஒரு மிகப்பெரிய அளவில் காசு பார்வர் விராட் கோலி கிரிக்கெட் வாரியமும் கொடுக்கும் காசை தாண்டியும் பல்வேறு விதமான வழியில் இவருக்கு காசு கொட்டுகின்றன.
அந்த வகையில் விளம்பரங்கள் படங்கள், பிராண்ட் அம்பாசிடர், தூதர் என பல கணக்கில் கோடிகள் வருகிறது அது மட்டுமன்றி உலகின் மிகப்பெரும் பணக்கார கிரிக்கெட் வாரியம் bcci இந்திய வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது.
இவர் இந்திய அணியில் டாப் லெவெலில் இருக்கிறார் இதனால் A+ கிரேட்டில் இருப்பதால் இவர் ஒரு ஆண்டுக்கு சம்பளமாக 7 கோடி வாங்குகிறார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம்.
ஐபிஎல் போட்டிகளுக்காக சுமார் 17 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் இப்படி சம்பளம் உயர்ந்து கொண்டே போகிறது. கிரிக்கெட் வாரியமும் கொடுக்கவும் சம்பள விஷயத்தில் கோலி 7 கோடி சம்பளம் வாங்குகிறார்.
ஆனால் அவரையே தற்போது ஓவர்டேக் செய்து உள்ளனர் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன்னா ஜோ ரூட் ஒரு ஆண்டுக்கு 7 லட்சம் பவுண்டுகளை சம்பளமாக கொடுக்கிறது இங்கிலாந்து நிறுவனம் அப்படி பார்த்தால் இந்தியாவின் மதிப்பில் அது 8 கோடி என கூறப்படுகிறது மேலும் சோப்ரா ஆர்செரின் சம்பளமும் கோலியை விட அதிகம் என கூறப்படுகிறது.