தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பனை பெற்று வரும் நிலையில் அனைத்து திரைப்படங்களும் உலக அளவில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிகில் இத்திரைப்படத்தை அட்லி இயக்க விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.அதோடு இவர்களை தொடர்ந்து ஏஆர் ரகுமான் இசையமைத்த இத்திரைப்படத்தின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது மிகப்பெரிய அளவில் இத்திரைப்படம் ஹிட் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான். இவர் இத்திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நீண்ட காலங்களாக ஜியோமான் என்ற ஒருவரை காதலித்து வந்தார். இவர்களுடைய திருணம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி அன்றே கேரளாவில் நடந்து முடிந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து மற்றொரு நடிகைக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அது வேறு யாருமில்லை அதே திரைப்படத்தில் நடித்து வந்த காயத்ரி ரெட்டி தான் இவர் மாடல் அழகியாக தனது 18 வயதில் இருந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தனது 18 வயதில் மாடல் துறையில் அறிமுகமான இவர் தற்போது வரையிலும் அந்த துறையில் சாதித்து வருகிறார். 2010ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தார்.
பிகில் படத்தினைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் ஜீ தமிழில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் தனது நிச்சயமாகிவுள்ளதாக பதிவிட்டு தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிச்சயமாகிவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.