பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்து மீண்டும் சில வருடங்கள் கழித்து சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நடிகைகள் சிலர் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை கனிகா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் பல படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். மேலும் தமிழில் அஜித் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்த இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இவருக்கு பிரபல தொழிலதிபருடன் திருமணமான நிலையில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து ஏராளமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில்ல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் பிறந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவங்களை குறித்து இவர் பேசியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது என்னுடைய மகன் பிறந்ததும் அவனை என் கண்ணில் காட்டவில்லை இதயத்தில் பிரச்சனை இருக்கிறது இரவு வரை தான் குழந்தை உயிரோடு இருக்கும் என சொன்னார்கள்.
பிறகு ஏழு மணி நேரம் ஆபரேஷனுக்கு பிறகு அவனை பிழைக்க வைத்தார்கள் இதனால் அவனை தற்போது வரையிலும் மிகவும் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். நடிகை கனிகா சோசியல் மீடியாவில் கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகிறது மேலும் இவர் தன்னுடைய மகனுடன் நடனமாட வீடியோக்கள் புகைப்படங்கள் பலவற்றையும் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.