தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள ரஜினி எப்படி ஓடுகிறதோ அதுபோல அந்த இடத்தை பிடிக்க விஜய்யும் தற்போது அயராது சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வேட்டையாடி வருகிறார் இதனால் வெகுவிரைவிலேயே ரஜினியின் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக விஜயின் திரை படங்கள் ஒவ்வொன்றும் வசூல் வேட்டையில் ஒரு படத்தை விட இன்னொரு படம் வசூலில் முந்துகிறது இதனால் தற்போது அசுர வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார் அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு பையன் தனது மாமாவுடன் அண்ணா சாலை ஓரத்தில் உள்ள பட்டுலாஸ் என்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் வண்டியில் இருந்துகீழே விழுந்ததில் கண்ணுக்கு கீழே மிகப்பெரிய அடிபட்டு ரத்தக் காயம் வந்தது அதை உணர்ந்த அவரது மாமா உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அந்த சிகிச்சையை பார்த்த மருத்துவர் தையல் போட மயக்க ஊசியை அந்த சிறுவனுக்கு போட ஆரம்பித்தனர் ஆனால் அந்த சிறுவனோ வலியால் துடித்து கத்தியதால் ஊசி போட முடியாமல் திணறினர்.
இந்த நிலையில் அங்கிருந்த ஒருவர் வந்து உனக்கு யாரை பிடிக்கும் என கேட்க எனக்கு சினிமாவில் நடிகர் விஜய் மட்டும் தான் பிடிக்கும் என ஓப்பனாக கூற உடனே விஜய் பற்றிய வசனங்கள் போன்றவற்றை கேட்டறிந்தார் அப்பொழுது அந்த நபர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் சில காட்சிகளை யூடியூபில் இருந்து போட்டுக் காட்டினார் அதை பார்த்துக்கொண்டே இருந்த சிறுவனுக்கு மருத்துவர் மயக்க ஊசி போட்டார்ர். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முடிந்தது.
இதை அறிந்த விஜய் உடனடியாக அந்த சிறுவனை பார்க்க தனது ரசிகர் மன்றம் அலுவர்களுக்கு வேண்டுகோள் கொடுத்தார் இதனையடுத்து அந்த பையனை பற்றியும் அவரது மாமாவை பற்றியும் விவரித்தனர் ஆனால் அவரது மாமா சரியான அட்ரஸை கூட கொடுக்காமல் அங்கிருந்து வேறு ஒரு அட்ரஸ் கொடுத்து விடும் போன் நம்பரையும் சரியாக கொடுக்காமல் சென்று விட்டனர்.
பிறகு எப்படியோ விஜய் ரசிகர் மன்ற ரசிகர்கள் அந்த சிறுவனின் சொந்தக்காரர்களின் அட்ரஸை வாங்கி தற்பொழுது அவரது அட்ரஸை வாங்க முனைப்பு காட்டி உள்ளனர் மேலும் அந்த சிறுவனுக்கு ஆபரேஷன் செய்த டாக்டரையும், சிறுவனையும் அழைத்து விஜய் பார்க்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.