சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து கலக்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக கமல், விஜய் சேதுபதி, பகத் பாஸில் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்பொழுது இவருடைய இயக்கத்தில் தளபதி 67 படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையுமா என் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள்.
அதாவது விக்ரம்-கைதி இரு திரைப்படங்களும் எப்படி ஒன்றாக இணைந்தது அதேபோல் விக்ரம்-கைதி- தளபதியை 67 இன்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU கான்செப்டில் தளபதி 67 படத்தினை இணைப்பாரா என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் LCUவில் தளபதி 67 திரைப்படம் இணைக்கப்பட்டு விட்டதாக கைதி, விக்ரம் படத்தில் பிஜாய் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நரேன் சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
எனவே தற்போது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். மேலும் இதனைத் தொடர்ந்து LCUவில் தளபதி 67 இணைவதால் கண்டிப்பாக ஒரே படத்தில் விஜய், கமல், சூர்யா, கார்த்திக்கை காண வேண்டுமென ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். விரைவில் இது குறித்து பட குழுவிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தற்பொழுது அதற்கான போஸ்டர் ஒன்றையும் உருவாக்கி சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்கள் அது வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விரைவில் தளபதி 67 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.