விஜய்க்காக மெனக்கெட்டு “சூப்பர் ஹீரோ” கதையை எழுதிய இயக்குனர்.! கடைசியில் நடிக்கப்போவது விக்ரமா.?

vikram-and-vijay
vikram-and-vijay

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கதாபாத்திரம் எந்த மாதிரியான  கெட்டப் போட்டு நடிக்க சொன்னால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தயங்காமல் நடிப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில்  சிவாஜி, கமலுக்கு பிறகு நடிகர் விக்ரம் தான் அதை நேர்மையாகவும் திறன்பட செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். சமீபகாலமாக விக்ரமின் திரைப்படங்கள் பெருமளவு வெற்றியை ருசிக்காத காரணத்தினால் தற்போது வெற்றியை கொடுக்க போராடி வருகிறார்.

இவர் கையில் இப்பொழுது பொன்னியின் செல்வன் முதல் பாகம், கோப்ரா, மஹான் போன்ற பல்வேறு திரை படங்கள் கைவசம் இருக்கின்றன. இது போதாத குறைக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து மட்டுமே படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் பா ரஞ்சித்துடன் கதை கேட்டு தனது 61 வது திரைப்படத்திலும் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இயக்குனர் பா ரஞ்சித் சொன்ன கதை ரொம்ப பிடித்துப் போகவே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்  நடிகர் விக்ரம். ஆனால் உண்மையில் பா ரஞ்சித் இந்த படத்தின் கதையை மற்றொரு டாப் நடிகருக்கு தான் முதலில் சொல்லி உள்ளார்.

அது வேறு யாரிடமும் சொல்லவில்லை முதலில் விஜய்யுடன் தான் அந்த சூப்பர் ஹீரோ கதையை சொல்லி உள்ளார் ஆனால் விஜய்யோ இப்பொழுது வேண்டாம் என கூறி கைவிடவே உடனடியாக இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக நடிகர் சியான் விக்ரம் உடன் இந்த கதையை கூறி தற்பொழுது அவரை கமிட் செய்து விட்டாராம்.