ரொமான்டிக் ஜோடியை அண்ணன் தங்கையாக நடிக்க வைக்க இருந்த இயக்குனர்..! பேட்டியில் வெடித்த உண்மை..!

aarya

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வரும் ஒரு நடிகை தான் நயன்தாரா இவர் ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ராஜா ராணி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் இதுவரை ஆர்யாவுடன் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே அவருடைய நடிப்பில் பிரமாண்டமாக பேசப்பட்டது.

ஆனால் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடித்தார்கள் என்றால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை அந்த வகையில் இரண்டு பிரபலங்களும் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் நயன்தாரா மற்றும் ஆர்யாவை குறித்து ஒரு ரகசியமான பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதாவது சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை முதல் பாகம் முதல் மூன்று பாகம் வரை எடுத்து உள்ளார் அதில் ஆண்ட்ரியா, வினய், ஹன்சிகா போன்றோர் முதல் பாகத்தில் நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் சுந்தர் சி அவர்கள் ஆண்ட்ரியாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார் ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் ஆர்யாவை தான் நடிக்க வைக்கலாம் என நினைத்தாராம் அதேபோல ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என விரும்பினார் ஆனால் சில பல காரணத்தினால் அது முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இதை பற்றி சுந்தர்சி கூறியது என்னவென்றால் ஒருவேளை ஆர்யா மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து இருந்தால் நிச்சயம் இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

sundhar c
sundhar c

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படத்தின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது இன் நிலையில் அப்படி நான் நடிக்க வைத்திருந்தால் இந்த திரைப்படம் கண்டிப்பாக தோல்வியை தான் சந்தித்திருக்கும் என சுந்தர் சி கூறியுள்ளார்