தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ஏதாவது ஒரு சிறப்பான கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் இவரின் திரைப்படங்கள் ஒரு சில கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக அமோக வெற்றியைப் பெற்று விடுகிறது. இவர் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வலிமை திரைப்படம் வெளிவந்தது.
இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்த நிலையில் கலவை விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் வெற்றி பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு தற்போது அஜீத் தனது 61 படத்தில் நடிப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.
நேர்க்கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் மீண்டும் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அஜித் நடிக்க உள்ள இப்படம் வங்கி கொள்ளையர்களை முக்கியமாக வைத்து இத்திரைப்படத்தின் கதை அமையவுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என நடிக்க இருக்கிறாராம். சமீபத்தில்கூட அஜித் இந்த திரைப்படத்தின் கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்க இருக்கிறார். நடிகை மஞ்சுவாரியார் மலையாளத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க இருந்தாலும் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.