தமிழ் திரையுலகில் நடிக்கும் பல நடிகைகளுக்கு தற்போது பாலியல் தொல்லை அதிகமாகி கொண்டே போகிறது தினமும் இதைப் பற்றி ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை இயக்குனர் ஒருவர் கொடுத்ததாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உடுமலைப்பேட்டை சேர்ந்த 25 வயதான ரஞ்சித் என்பவர் மூன்று பேர் என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார் இந்த தொடரில் கதாநாயகியாக 25 வயது இளம் நடிகை ஒருவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வெப் தொடரின் படப்பிடிப்பின்போது இயக்குனர் ரஞ்சித் அவரிடம் என்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்ததாகவும் அவ்வபோது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த நடிகை பல முறை ரஞ்சித்தை கண்டித்துள்ளார். மேலும் இயக்குனர் ரஞ்சித் அந்தப் நடிகையிடம் எல்லை மீறி போனதால் அந்த நடிகை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரஞ்சித்தின் உதவி இயக்குனர்களை விசாரித்தபோது அந்த நடிகைக்கு ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இதனால் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இப்படியே எத்தனை ஆண்டுகள்தான் நடந்து வரும் இதற்கு முற்றுப்புள்ளி இல்லையா என்று கூறி வருகிறார்கள்.