பிறமொழி நடிகைகள் தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்கின்றனர் அந்த வகையில் மலையாளத்தைச் சார்ந்த நயன்தாரா தமிழில் ஐயா என்னும் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படத்திலேயே தனது திறமை மற்றும் கிளாமரை காட்டியதால் இவருக்கான வரவேற்பு அதிகரிக்க தொடங்கியது..
இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, அஜித்.. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களின் உடன் படம் பண்ணுவது மற்றும் சோலோ படங்களில் நடித்து வருவதால் இன்று வரை இவருடைய மார்க்கெட் குறையவே இல்லை.. இப்பொழுது கூட நயன்தாரா கைவசம் ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
இதில் விறுவிறுப்பாக ஜவான் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது இப்படி பிசியான நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நயன்தாரா அவ்வபோது மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அப்படி அண்மையில் பிரபல youtube சேனல் நடத்திய விருது விழா ஒன்றில் நயன்தாரா உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது மேடையில் விருது வாங்கிய நன்றி உரையாற்றிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கடந்த ஆண்டு கோலமாவுக்கு விருது வாங்கும் போது நயன்தாராவுக்கு நன்றி கூற ஆசைப்பட்டேன் ஆனால் அவர் அந்த விழாவில் இல்லை இந்த விருது விழாவிற்கு அவர் வந்து கிளம்ப போவதாக என்னிடம் முன்பே கூறினார்.
அதனால் நான் நயன்தாராவின் செருப்பை திருடி மறைச்சு வச்சிக்கிட்டு தான் மேடைக்கு வந்துள்ளேன் என கூறி சிரித்துக் கொண்டே நயன்தாராவுக்கு நன்றி சொன்னார் சில மாதங்கள் முன்னர் வெளியான அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நயன்தாரா செம க்யூட்டாக சிரிக்கும் அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்.