உலகநாயகன் கமலஹாசன் நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன போதைபொருள் அதேசமயம் ஆக்ஷன் கலந்த கதை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போகவே அந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் கதையை எப்படி கமலுக்கு அழகாக சொன்னாரோ அதே போலவே படத்தை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சூப்பராக எடுத்துள்ளார்.
சொல்ல வேண்டும் என்றால் இதுவரை இந்த அளவிற்கு எந்த ஒரு தமிழ் சினிமா கதையும் உருவானது இல்லை அந்த அளவிற்கு எதிர்பார்க்க வைக்கும் வகையில் இந்த படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருந்தார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக உலகநாயகன் கமலஹாசன் தற்போது பட குழுவினருக்கு மற்றும் படத்தில் நடித்த பிரபலங்களுக்கும் பரிசு பொருளை கொடுத்து அழகு பார்த்து வருகிறார். அந்த வகையில் முதலாவதாக உதவி இயக்குனர் 13 பேருக்கு அப்பாச்சி பைக் வாங்கி கொடுத்துள்ளார்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜுக்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தினார் இவர்களை தொடர்ந்து படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் வந்து போனாலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் சூர்யா மிரட்டி இருந்தார் அதனால் அவருக்கும் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை கொடுத்தார் இதன் மதிப்பு மட்டுமே சுமார் இருபத்தி மூன்று லட்சத்தை விட அதிகம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ஷங்கர் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு உள்ளார் அது குறித்து பார்ப்போம். விக்ரம் படம் வாவ்.. பார்க்க ரொம்ப அருமை. 360° பெரிய திரையில் துப்பாக்கிச் சூடு, ஒரு உண்மை புராணத்தை போல.. மிகப் பெரிய முயற்சி மற்றும் படத்தில் பயணித்துள்ள நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் ஷங்கர்.