Vijayakanth : தமிழ் சினிமாவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமா உலகில் நரசிம்மா, ரமணா, கேப்டன் பிரபாகரன், உழவன் மகன், நல்லவன், வைதேகி காத்திருந்தாள், வாஞ்சிநாதன் என பல வெற்றி படங்களை கொடுத்து பெயரையும் புகழையும் சம்பாதித்த விஜயகாந்த்..
ஒரு கட்டத்தில் அரசியலிலும் இறங்கி வெற்றிகளை கண்டார்.. அரசியலில் மென்மேலும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்தாண்டு இறுதியில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பிறகு அவரைப் பற்றிய பேச்சுக்களும் அவருடைய பழைய பேட்டிகள் குறித்தும் தகவல்கள் வெளி வருகின்றன.
பொங்கல் தினத்தன்று வெளியான தனுஷ் திரைப்படங்கள்.. வசூல் வேட்டையாடும் கேப்டன் மில்லர்!
அப்படி விஜயகாந்த் பழைய பேட்டி ஒன்றில் என்னை பல கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்த இயக்குனர்கள் குறித்து பேசி உள்ளார்.. சண்டை காட்சிகள் என்றால் எல்லோரும் சுலபமாக நினைக்கிறார்கள் ஆனால் அதுதான் மிக கடினம் ஒரு சண்டைக் காட்சிகள் நடித்த மூன்று நாளைக்கு உடம்பு வலிக்கும்..
அதே போல் என்னை எல்லோரும் அப்படியே பார்த்த போது ஆர் சுந்தர்ராஜன் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வேற மாதிரி நடிக்க வைத்தார் அதேபோல் எனக்கு நகைச்சுவை காட்சிகளில் நடிக்க வராது என பலரும் நினைத்த பொழுது கதையாசிரியர் வசனகர்த்தா..
மற்றும் எனது நண்பர் லியாகத் அலிகான் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு விஜயகாந்த்தை வைத்து காமெடி கொடுக்க முடியும் என நிரூபித்த திரைப்படம் தான் பாட்டுக்கொரு தலைவன் யாருமே நம்பாத போது அவர் என்னை நம்பினார் சில திரைப்படங்களில் நான் காமெடி காட்சிகளில் நடித்ததற்கு அவர்தான் காரணம் என விஜயகாந்த் கூறினார்.